search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தர்ணா"

    தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    லால்குடி: 

    திருச்சி மாவட்டம், சமயபுரம் இனாம்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வெங்கடேஷ்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தேர்முட்டி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் கண்மணி(25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    கண்மணியின் அத்தை மகன் தர்மராஜுக்கு, வெங்கடேஷ் நண்பர் ஆவார். இதனால் டால்மியாவில் உள்ள தர்மராஜ் வீட்டுக்கு வெங்கடேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அத்தை வீட்டில் தங்கி படித்த கண்மணிக்கும், வெங்கடேசுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 9 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். கண்மணியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் பலமுறை வெங்கடேஷ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெங்கடேசை கண்மணி வற்புறுத்தினார். ஆனால் வெங்கடேஷ் மறுத்து விட்டார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்மணி, கடந்த 2-ந் தேதி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கவிதா மனு ரசீது பதிவு செய்தார்.

    இந்நிலையில் நேற்று காலை லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கண்மணி, போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து, தன்னை காதலித்து ஏமாற்றிய வெங்கடேசுடன் திருமணம் செய்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, கண்மணி அங்கிருந்து சென்றார். 
    மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணை கணவர் வீட்டில் அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டத்தை அடுத்த முண்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரமா (வயது 24). ரமாவுக்கும் கோட்டகம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகேஷ் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    திருமணம் முடிந்த ஓராண்டுக்கு பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு உறவினர்கள் இருவருக்கும் இடையே சமரசம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சமீபத்தில் மகேஷ் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார்.

    ஊர் திரும்பிய மகேஷ், மனைவியை சந்திக்க வில்லை. எனவே கணவரை பார்க்க ரமா,நேற்று அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் கணவரின் பெற்றோர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க வில்லை.

    மேலும் வீட்டில் இருந்த ரமாவின் பொருள்களை கொடுத்து அவரை அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமா, தனது குழந்தையுடன் கணவர் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது பற்றி அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரித்தனர்.

    இன்று ரமா, இது பற்றி மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயசாந்தி (வயது 21). அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் லோகநாதன் (28). இவர் சிறிது காலம் முசிறி போலீஸ் நிலையத்தில் காவலராக வேலைபார்த்துவிட்டு, தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார். பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லோகநாதன் காவலராக பணிபுரிந்த போது, விஜயசாந்திக்கும் லோகநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியில் உள்ள விஜயசாந்தியின் தோழி வீட்டில் தங்கி, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக விஜயசாந்தி தரப்பில் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம், துறையூரில் விஜயசாந்தி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே விஜயசாந்தி 6 மாத கர்ப்பமாக இருந்தாராம். இதையறிந்த, லோகநாதன் மற்றும் அவரது பெற்றோர் கருவை கலைத்தால் மட்டுமே, குடும்பத்துடன் ஏற்றுகொள்வதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, துறையூர் பாலக்கரையில் உள்ள சித்த மருத்துவரிடம் கருவை கலைத்துள்ளார். இதையடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்ல வற்புறுத்தியதற்கு, லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து விஜயசாந்தி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதைதொடர்ந்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது, முசிறி காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த விஜயசாந்தி, தனது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க கோரியும், தன்னை ஏற்க மறுத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது உறவினர்களுடன் வந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மகளிர் போலீசார், பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து விஜயசாந்தி மற்றும் அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். அதன் பின்பு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
    ×